• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தோண்ட தோண்ட சடலங்கள்.. 400க்கும் மேற்பட்டோர் கொலை.. கென்யா மத போதகர் மீது குவியும் குற்றச்சாட்டு!

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
தோண்ட தோண்ட சடலங்கள்.. 400க்கும் மேற்பட்டோர் கொலை.. கென்யா மத போதகர் மீது குவியும் குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய பெருங்கடலுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்து புதைத்தாக “ஸ்டார்வேஷன் கல்ட்” தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கென்யா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 

தன்னை ஒரு மத போதகர் என்று கூறிக்கொள்ளும் நிதெங்கே மெக்கென்சி, இயேசு கிறிஸ்துவதை சந்திக்க வைப்பதாக கூறி 400-க்கும் மேற்பட்டோரை பட்டினியால் சாகடித்ததாகவும், பயங்கரவாதம், குழந்தைகளை சித்ரவதை செய்தது  உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று மெக்கன்சி மற்றும் அவரது மற்ற 38 கூட்டாளிகள், 3 பச்சிளம் குழந்தைகள் உட்பட 191 குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் தங்களை நிரபராதி என்று தெரிவித்துள்ளனர். இதில் 31 வது குற்றவாளி சற்று மனநலம் சரியில்லாமல் இருந்ததால் அவரை ஒரு மாதத்திற்கு பிறகு மலிந்தி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்டார்வேஷன் கல்ட் தலைவர் மெக்கன்சி மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷ்காஹோலா காட்டுப்பகுதியில் தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுகப்பட்டது.  இந்த சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் அவர்   கைது செய்யப்பட்டார்.

தோண்டியெடுக்கப்பட்ட சடலங்களை உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் 429 பேர் பசியால் உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் குழந்தைகளின் சடலங்களை சோதனை செய்து பார்த்தபோது அவர்கள் அடித்து, கொடுமைபடுத்தப்பட்டு, போராடி உயிரிழந்தது தெரியவந்தது.

விளம்பரம்

மெக்கன்சி உருவாக்கிய குட் நியூஸ் இன்டர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ் ஒரு  குற்றாவளிகள் குழு என்றும் அவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : பற்றி எரியும் காட்டுத்தீ… 46 பேர் பலியான நிலையில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

கடந்த மாதம் டொனோனோகா குழந்தைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையின்படி, மெக்கன்சி மற்றும் அவரது 38 கூட்டாளிகள் வேண்டும் என்றே குழந்தைகளுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு முள் குச்சிகளால் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இது மட்டுமென்றி சில குழந்தைகளுக்கு கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

குமாரபாளையம் பகுதியில் அரசியல் கட்சி துண்டு, மப்ளர் தயாரிப்பு பணி தீவிரம் | Political Party Striped, Muffler Production Work Intensive or Komarapalayam Area

Next Post

‘என் பேத்தி இப்போது குடிமகள், ஆனால் இன்னும் வெளிநாட்டு மாணவருக்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்’ – Malaysiakini

Next Post
‘என் பேத்தி இப்போது குடிமகள், ஆனால் இன்னும் வெளிநாட்டு மாணவருக்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்’ – Malaysiakini

‘என் பேத்தி இப்போது குடிமகள், ஆனால் இன்னும் வெளிநாட்டு மாணவருக்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்’ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin