Last Updated:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய தேசியக் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறும் பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய தேசியக் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. கராச்சியில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த மைதானத்தில் இந்தியாவைத் தவிர மற்ற 7 நாடுகளின் தேசியக் கொடிகள் இடம் பெற்றுள்ளன. எந்தவொரு விளையாட்டு திருவிழா என்றாலும், அதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சென்று இந்திய அணி விளையாட மறுத்ததால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளன. தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடாததால் இந்திய தேசியக் கொடியை பாகிஸ்தான் புறக்கணித்திருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 17, 2025 3:38 PM IST


