மலேசியாவின் வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் பைக் கான்வாயின் மீது, கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் மார்ச் 23ஆம் தேதியன்று அதிகாலை நேர்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அதிகாலை 3 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
33 வயதான லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post உணவு சாப்பிட சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin