Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரையொட்டி அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரர் காயம் அடைந்திருக்கும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 20-ஆம் தேதி புதன் அன்று தனது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரையொட்டி அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை பிடிக்க முயன்ற போது ரிஷப் பந்த் முழங்காலில் காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இது என்ன மாதிரியான காயம் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்யவில்லை. ஏற்கனவே 2022 டிசம்பரில் நடந்த கார் விபத்தில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரிஷப் பந்த் அணிக்கு திரும்பினார். இந்நிலையில் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது லேசான காயமாக இருந்தால் ரிஷப் பந்த் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
February 16, 2025 9:35 PM IST


