Last Updated:
எலான் மஸ்க்கின் 13-ஆவது குழந்தை குறித்து எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் செய்தி வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. மஸ்க் பதிலளிக்காமல், கிண்டலாக பதில் அளித்தார்.
எலான் மஸ்க்கின் 13-ஆவது குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக பெண் எழுத்தாளர் ஒருவர் பதிவிட்ட நிலையில், அந்தப் பெண்ணை சீண்டும் வகையில் எலான் மஸ்க் போட்ட பதிவு விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
உலகின் அதிகாரம் மிக்க அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் விளையாடும் அளவிற்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிடமே சில்மிஷங்கள் செய்யும் அளவிற்குமான சுதந்திரம் உலக பணக்காரர் எலான் மஸ்கின் குழந்தைக்கு மட்டுமே சாத்தியம். அந்த அந்தஸ்தைப் பெற, தனது குழந்தைக்கும் உரிமை உள்ளதாகக் கூறி உலகின் கவனத்தைப் பெற்றுள்ளார் 26 வயது பெண் எழுத்தாளர் ஒருவர். அதற்கு காரணம், 52 வயதான எலான் மஸ்க் 2000-ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது.
இதன்பின் ஜஸ்டின் வில்சனுடன் இணைந்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலான் மஸ்க், 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தொடர்ந்து பிரபல நடிகையான ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் எந்த குழந்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகியான க்ரீம்ஸை காலித்து வந்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். மூவரையும் விட்டு பிரிந்த மஸ்க், ஷிவோன் ஷில்லீஸ் என்பவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதனால் எலான் மஸ்க்-க்கு மொத்தமாக 12 குழந்தைகள் பிறந்த நிலையில் 11 குழந்தைகள் அவருடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர், தனக்கு 5 மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக இந்த விஷயத்தை வெளியில் கூறாமல் இருந்ததாக விளக்கம் தந்துள்ளார்.
ஆனால், இதற்கு எந்த விளக்கமும் எலான் மஸ்க் நேரடியாக தராவில்லை. அதே சமயம், 5 ஆண்டுகளுக்கு முன்பே எலான் மஸ்க்கை மயக்க ஆஷ்லே முயற்சித்ததாக எக்ஸ் பயனாளி போட்ட பதிவிற்கு கிண்டலாக Whoa என எலான் மஸ்க் பதிலளித்தார். 13-ஆவது குழந்தை குறித்த செய்தி பொய் என்பதால், விளையாட்டாக எலான் கடந்து சென்றுள்ளதாக ஒரு தரப்பும், பாதிக்கப்பட்ட பெண்ணை இப்படி அவமதிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பும் கூறி வருகின்றனர்.
பல நாட்களாக எலானை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், தனக்கு நேரடியாக பதிலளிக்காமல் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோருக்கு பதிலளிப்பது ஏன் என்றும் ஆஷ்லேவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், ஆஷ்லே போட்ட பதிவுகள் அனைத்தையும் அவரே நீக்கி விட்ட நிலையில், எலான் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்தை கிளப்பி உள்ளன.
February 16, 2025 7:24 PM IST
பிரபல எழுத்தாளரின் 13வது குழந்தைக்கு தந்தையான எலான்? ஒரே வார்த்தையில் மஸ்கின் கேலியான பதிவு வைரல்


