ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானில் வரும் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அணி மறுத்ததால் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் கே.எல். ராகுல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய போதிலும், இரண்டாவது விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், கே.எல். ராகுல்தான் அணியின் முதல் விக்கெட் கீப்பர் என்று கம்பீர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இது ரிஷப் பண்ட் இடம் குறித்த கேள்விகளை எழுப்பியது.
இதையும் படிக்க: முடிவடைகிறதா மற்றொரு சகாப்தம்..? கோலி, ரோகித், ஜடேஜாவுக்கு இதுதான் கடைசி தொடர்?
இடது கை பேட்ஸ்மேனாகவும் ஆல்ரவுண்டராகவும் செயல்படக்கூடிய அக்சர் படேல் அணியில் இடம் பெற்றதால், ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்புகள் மேலும் குறைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல், 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
மறுபுறம், ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு மிகவும் தேவையான நம்பிக்கையை அளித்தார். இதனால் கம்பீர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், 2ஆவது விக்கெட் கீப்பர் குறித்தும், ஸ்ரேயஸ் ஐயரை அணியில் சேர்பது இந்திய அணியை தேர்ந்தெடுப்பதில் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்க்கும், அஜித் அகர்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கருத்து வேறுபாடுகள் இங்கிலாந்து தொடருக்கு முன்பிலிருந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்திய அணி இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. தற்போது அதேபோல வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா.
February 16, 2025 2:59 PM IST

