• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக ரூ.262 கோடி லாபம் சம்பாதித்த பிஎஸ்என்எல்: 9 கோடி வாடிக்கையாளர்களுடன் வளர்ச்சி | BSNL earns profit of Rs 262 crore for the first time in 17 years

GenevaTimes by GenevaTimes
February 16, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக ரூ.262 கோடி லாபம் சம்பாதித்த பிஎஸ்என்எல்: 9 கோடி வாடிக்கையாளர்களுடன் வளர்ச்சி | BSNL earns profit of Rs 262 crore for the first time in 17 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், நடப்பு 2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டு (அக்டோபர் – டிசம்பர்) நிதிநிலை அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இன்று முக்கியமான நாள். டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக காலாண்டு காலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது இந்நிறுவனத்துக்கு திருப்புமுனை ஆகும்.

இந்த காலகட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் சேவை பிரிவின் வருவாய் 15%, வீடுகளுக்கான பைபர் சேவை பிரிவின் வருவாய் 18%, குத்தகை சேவை வருவாய் 14% உயர்ந்துள்ளது. இது, பிஎஸ்எல்எல் நிறுவனம் புத்தாக்கம், நெட்வொர்க் விரிவாக்கம், செலவு குறைப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,100 கோடியாக இருந்த வரிக்கு முந்தைய வருவாய் (எபிடா), 2023-24 நிதியாண்டில் இரு மடங்காகி ரூ.2,100 கோடி யாகி உள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் ஒட்டுமொத்த வருவாய் அதிகரிப்பதுடன் செலவும் கட்டுக்குள் வரும். கடந்த ஆண்டைவிட இழப்பும் குறையும்.

கடந்த ஜூன் மாதம் 8.4 கோடியாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் 9 கோடியாக அதிகரித்துள்ளது.

பிஎஸ்என்எல் இப்போது நாடு முழுவதும் உள்ள வாடிக்கை யாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் அமைக்க திட்டமிடப் பட்டு அவற்றில் 75 ஆயிரம் டவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 60 ஆயிரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வரும் ஜூன் மாத வாக்கில் 1 லட்சம் டவர்களும் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.



Read More

Previous Post

GGW vs UPW Preview: குஜராத் ஜெயண்ட்ஸ் vs யு.பி. வாரியர்ஸ் மகளிர் அணி இன்று மோதல்.. மேலும் விவரம் உள்ளே

Next Post

அமரன் படத்தின் `ஹே மின்னலே’ பாடல் 15 கோடி பார்வைகளை கடந்தது

Next Post
அமரன் படத்தின் `ஹே மின்னலே’ பாடல் 15 கோடி பார்வைகளை கடந்தது

அமரன் படத்தின் `ஹே மின்னலே’ பாடல் 15 கோடி பார்வைகளை கடந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin