Last Updated:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞர்களுக்கும், வடமாநிலத்தவர்களுக்கும் ரயிலில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ரயிலில் சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞர்களிடம் வடமாநிலத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் கடந்த 2023ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவைப் புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 3வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 நாட்டுப்புற கலைஞர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர். அப்போது நாக்பூரை அந்த ரயில் அடைந்தபோது முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அந்தப் பெட்டிகளில் ஏற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தமிழக நாட்டுப்புற கலைஞர்களுக்கும், வடமாநிலத்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இந்த வாக்குவாதத்தில், ரயிலின் கண்ணாடி, ஜன்னல்களை உடைத்து வடமாநிலத்தவர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.
#JUSTIN காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்ற தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்#Nagpur #KaasiTammilSangamam #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/PJtVCfOW0I
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 15, 2025
இதனால் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாட்டுப்புற கலைஞர்கள் பேருந்து மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழகத்திலிருந்து இன்னும் இரண்டு பிரிவுகளாக நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துச் செல்ல உள்ள நிலையில், தற்போது அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Nagpur,Maharashtra
February 15, 2025 4:14 PM IST
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல்


