• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​து ஆவணங்கள் ஒப்படைப்பு | Jayalalithaa 27 kg of jewelry handed over to Tamil Nadu Anti-Corruption Department

GenevaTimes by GenevaTimes
February 15, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​து ஆவணங்கள் ஒப்படைப்பு | Jayalalithaa 27 kg of jewelry handed over to Tamil Nadu Anti-Corruption Department
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​துக்​களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன.

1991-96 காலகட்​டத்​தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​துக்கு​வித்​ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்​பட்​டது. இவ்வழக்​கின் விசா​ரணை​யின்​போது தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸார் அவரது வீட்​டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவை​கள், காலணி​கள், கைக்​கடி​காரங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள், சொத்​துக்​களின் ஆவணங்கள் உள்ளிட்​ட​வற்றை கைப்​பற்றினர்.

இந்த வழக்கு தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​ட​தால், இந்த பொருட்​களும் கர்நாடக அரசின் கருவூலத்​தில் பத்திரமாக‌ வைக்​கப்​பட்டன. இவ்வழக்​கில் நீதிபதி ஜான் மைக்​கேல் டி’குன்ஹா கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை​யும், ரூ.100 கோடி அபராத​மும் விதித்​தார். மேலும், வழக்​கில் பறிமுதல் செய்​யப்​பட்டபொருட்களை அரசு ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடகா​வுக்கு உரிய தொகையை வழங்க

வேண்​டும் என தீர்ப்​பளித்​தார்.

வழக்கு நிறைவடைந்து 10 ஆண்டு​களுக்கு மேலாகி​யும் கர்நாடக அரசுக்கு வழக்கை நடத்திய தொகை வழங்​கப்​பட​வில்லை. எனவே, பெங்​களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடந்த 2023-ல் ஜெயலலி​தா​வின் நகைகளை ஏலம் விட வேண்​டும் என பெங்​களூரு குடிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இவ்வழக்கை விசா​ரித்த நீதிபதி ஹெச்​.ஏ.மோகன், “கர்​நாடக மாநில கருவூலத்​தில் உள்ள நகைகள், புடவை​கள், சொத்​துக்​களின் ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை​யிடம் ஒப்படைக்க வேண்​டும். சொத்​துக்கு​விப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்​நாடு அரசு வழங்க வேண்​டும்” என தீர்ப்​பளித்​தார்.

இந்நிலை​யில், ஜெயலலி​தா​வின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தை​யின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்​டும் என மனு தாக்கல் செய்​தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதி​மன்றம் கடந்த ஜனவரி 13-ம் தேதி தள்ளுபடி செய்​தது. இதை எதிர்த்து தீபா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்த மனுவை​யும் நீதி​மன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்​தது.

மதிப்​பீடு செய்த அதிகாரிகள்: இதையடுத்து, பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி மோகன் முன்னிலை​யில் ஜெயலலி​தா​வின் சொத்​துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்​கும் பணிகள் நேற்று தொடங்​கின. கர்நாடக கருவூலத்​தில் இருந்து த‌ங்கம், வெள்ளி, வைரநகைகள், சொத்து​களின் ஆவணங்கள் அடங்கிய 6 பெட்​டிகள் கொண்டு​வரப்​பட்டன. அதனை தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி. விமலா ஆகியோர் தலைமையிலான மதிப்​பீட்டு குழு ஆவணங்​களில் உள்ளவாறு சரிபார்த்து, மதிப்​பீடு செய்து பெற்று​கொண்​டனர். பின்னர் அந்த நகைகள் அனைத்​தும் புகைப்​படம், வீடியோ மூலம் பதிவு செய்​யப்​பட்​டது.

முதல்​கட்​டமாக 1,562 ஏக்கர் மதிப்​பிலான நிலத்​தின் ஆவணங்கள் ஒப்படைக்​கப்​பட்டன. பின்னர் 11 ஆயிரத்து 344 புடவை​கள், 750 காலணி​கள், 91 கைக்​கடி​காரங்கள் ஆகியவை ஒப்படைக்​கப்​பட்டன. இதையடுத்து சொத்​துப் பட்டியலில் இருந்த 468 தங்க, வைர நகைகள், ரத்தின கற்கள் சரிபார்க்​கப்​பட்டன. அதில் வரிசை எண் 155 வரையிலான நகைகள் நேற்று சரிபார்க்​கப்​பட்டு, மதிப்​பீடு செய்​யப்​பட்டு ஒப்படைக்​கப்​பட்டன. மொத்தம் 27 கிலோ எடையுள்ள நகைகள் ஒப்​படைக்​கப்​பட்டன. எஞ்​சி​யுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்​கள், சால்​வை​கள், மின்னணு சாதனங்​கள் உள்​ளிட்​டவை இன்று தமிழக அதிகாரி​களிடம் ஒப்​படைக்​கப்பட உள்ளதாக நீ​தி​மன்ற வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.



Read More

Previous Post

வடக்கில் அதிகரிக்கும் நிதி மோசடி : காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

Next Post

17 ஆண்டுகளுக்குப் பின் லாபம் பார்த்த BSNL.. எவ்வளவு தெரியுமா? – சாத்தியமானது எப்படி?

Next Post
17 ஆண்டுகளுக்குப் பின் லாபம் பார்த்த BSNL.. எவ்வளவு தெரியுமா? – சாத்தியமானது எப்படி?

17 ஆண்டுகளுக்குப் பின் லாபம் பார்த்த BSNL.. எவ்வளவு தெரியுமா? - சாத்தியமானது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin