உள்ளூராட்சி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) பிரேரணை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைப் பெற்றது.
இதற்கான ஒப்புதல், அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில், இன்று (14), பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது பெறப்பட்டது.
மேலும், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொலைதூரக் கல்வி மையத்தின் ஆண்டு அறிக்கையும் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.AN

