Last Updated:
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. புது அரசு பிப்ரவரி 19 அல்லது 20ம் தேதி பதவி ஏற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், அங்கு யார் முதல்வர்? எப்போது புது அரசு பதவி ஏற்கும் எனும் விவரம் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், வரும் 19 அல்லது 20ம் தேதி புது அரசு பதவி ஏற்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், புது அரசு பதவி ஏற்றதும், சுத்தமான குடிநீர், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
புது அரசு மற்றும் முதல்வர் தேர்வு குறித்து பேசியுள்ள பாஜக டெல்லி எம்.எல்.ஏ.வும், தேசிய செயலாளருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா, “பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார். விரைவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டத்திற்கான பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். புது அரசு பிப்ரவரி 19 அல்லது 20ம் தேதியில் இருந்து செயல்படும்.
முதல்வர் பதவிக்கு இங்கு எந்த போட்டியும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவரும், முதல்வரும் யார் என்பது தேர்வு செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
February 14, 2025 9:02 PM IST


