Last Updated:
ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட், சாஷே பேக்கிங்கில் பெயர் பெற்ற வெல்வெட் பிராண்டை கையகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட், அழகு சாதன மற்றும் பராமரிப்பு பொருள்கள் (personal care sector) தயாரிப்பில், புரட்சியை ஏற்படுத்திய வெல்வெட் பிராண்டை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், சாஷே பேக்கிங்கில் பொருள்களை சந்தைக்கு கொண்டுவருவதில் பெயர் பெற்றது.
அழகு சாதன மற்றும் பராமரிப்பு பொருள்கள் (personal care sector) போன்ற ஆடம்பர நுகர்வோர் அனுபவிக்கும் பொருட்களை சாதாரண மக்களும் பயன்படுத்த வேண்டும் என சி.கே. ராஜ்குமார் என்பவர் வெல்வெட் எனும் நிறுவனத்தை நிறுவினார். எனவே தனது நிறுவனம் தயாரிக்கும் பொருளை சாஷே மூலம் சந்தைப்படுத்தினார். எனவே எளிய மக்களும் இந்நிறுவனத்தின் பொருளை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தினர்.
தற்போது இருக்கும் நவீன நுகர்வோர்கள் பயன்பாட்டிற்காக இந்தியாவின் பாரம்பரிய பிராண்டுகளை மீண்டும் சந்தைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த வெல்வெட் பிராண்டை ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்தலின் மூலம் ரிலையன்ஸ் ஏற்கனவே கொண்டு இருக்கும் தரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்களின் பல்வேறு புதிய வகைகளும் அறிமுகம் செய்யமுடியும். மேலும், இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் பொருள்களை வாங்க முடியும்.
February 14, 2025 10:33 PM IST


