• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: காவல் துறை, சிஆர்பிஎஃப் படையினருடன் ஆளுநர் அவசர ஆலோசனை | Strife-hit Manipur placed under Presidents Rule

GenevaTimes by GenevaTimes
February 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: காவல் துறை, சிஆர்பிஎஃப் படையினருடன் ஆளுநர் அவசர ஆலோசனை | Strife-hit Manipur placed under Presidents Rule
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மணிப்​பூரில் ஆளுநரின் பரிந்​துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்​படுத்தப்பட்டுள்​ளது. மாநிலம் முழுவதும் பாது​காப்பு பலப்​படுத்தப்பட்​டுள்​ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் பழங்​குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்​குடியின மக்கள் போர்க்​கொடி உயர்த்தினர். இதன்​காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். 32 பேரை காணவில்லை. 5,000-க்​கும் மேற்​பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்​கப்​பட்டன. கோயில்​கள், தேவால​யங்கள் சேதப்​படுத்​தப்​பட்டன. சுமார் 65,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம் பெயர்ந்​தனர். இதில் பெரும்​பாலானோர் நிவாரண முகாம்​களி​லேயே வசிக்​கின்​றனர். மாநிலம் முழு​வதும் 11,000-க்​கும் மேற்​பட்ட வழக்​குகள் பதிவு செய்​யப்​பட்டு உள்ளன.

இரண்டரை ஆண்டு​களாகி​யும் மணிப்​பூரில் இன்ன​மும் இயல்பு நிலை திரும்ப​வில்லை. மைதேயி, குகி சமுதாய மக்கள் அவ்வப்​போது தொடர்ந்து மோதல்​களில் ஈடுபட்டு வருகின்​றனர். கடந்த ஆண்டு மட்டும் 120-க்​கும் மேற்​பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி மணிப்​பூர் சட்டப்​பேர​வை​யின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருந்​தது. இந்த கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் குமார் பல்லா திடீரென ரத்து செய்​தார். சட்டப்​பேர​வை​யில் மொத்தம் 60 எம்எல்​ஏக்கள் இருந்​தனர். இதில் பெரும்​பான்​மையை நிரூபிக்க 31 எம்எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக​வுக்கு 32 எம்எல்​ஏக்​களின் ஆதரவு இருந்​தது. ஆனால் குகி சமுதா​யத்தை சேர்ந்த சில பாஜக எம்எல்​ஏக்கள் முதல்வர் பிரேன் சிங்​குக்கு எதிராக போர்க்​கொடி உயர்த்தினர். அவருக்கு எதிராக நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரவும் திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது.

இந்த சூழலில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்​தார். மாநிலத்​தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆளுநர் அஜய் குமார் பல்லா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு​விடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்​தார். அதில் மணிப்​பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்செய்ய ஆளுநர் பரிந்​துரை செய்திருந்​தார். இதைத் தொடர்ந்து மணிப்​பூரில் நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்​தப்​பட்​டது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளி​யிட்டஅரசாணை​யில், ‘ஆளுநர் அளித்த அறிக்கை முழு​மையாக ஆய்வு செய்​யப்​பட்​டது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்ய வேண்டிய அவசியம் எழுந்​திருப்பது தெளிவாகிறது. எனவே 356-வது பிரி​வின்படி மணிப்​பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்​படுத்​தப்​படு​கிறது. ஆட்சி, நிர்​வாகத்தை ஆளுநர் மேற்​கொள்​வார்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அவசர ஆலோசனை: மணிப்​பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நேற்று ஆளுநர் அஜய் குமார் பல்லா தலைமை​யில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்​றது. இதில் சிஆர்​பிஎஃப் மூத்த அதிகாரிகள் பங்கேற்​றனர். மணிப்​பூர் முழு​வதும் மேற்​கொள்​ளப்​பட்டு இருக்​கும் பாது​காப்பு ஏற்பாடுகள் குறித்து ஆளுநரிடம், சிஆர்​பிஎஃப் அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்​தனர். ஆளுநரின் உத்தர​வின்​பேரில் மாநில காவல் துறை மற்றும் சிஆர்​பிஎஃப் படை சார்​பில் பலத்த பாது​காப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்டு உள்ளன. குறிப்பாக மைதேயி, குகி பிரிவை சேர்ந்த கிளர்ச்​சிக் குழுக்கள் கண்காணிப்பு வளையத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு உள்ளன. முன்​னாள் முதல்வர் பிரேன் சிங் நேற்று கூறிய​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்​துக்கு பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்​களால் சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்​கப்​பட்​டது. மாநில அரசால் நிலை​மையை கையாள முடிய​வில்லை.

மணிப்​பூர், மியான்மர் இடையே 398 கி.மீ. தொலை​வுக்கு எல்லைப்​பகுதி நீள்​கிறது. இதனால் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்​தில் ஊடுருவலை தடுப்​ப​தற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்​படுத்த வேண்​டும். இவ்வாறு அவர் கூறினார். குகி சமுதாய மக்களின் ஐடிஎல்எப் அமைப்​பின் செய்தித் தொடர்​பளர் கின்ஜா வுல்​ஜாங் கூறும்​போது, ‘‘இரு சமுதா​யங்​களும் இணைந்து வாழ முடி​யாது. குகி சமுதாய மக்கள் வசிக்​கும் பகுதிகளை பிரித்து தனி மாநிலத்தை உருவாக்க வேண்​டும். இதன்​மூலம் மட்டுமே பிரச்​சினைக்கு நிரந்தர தீர்வு காண முடி​யும்’’ என்று தெரி​வித்​தார்​.



Read More

Previous Post

அதிகாலையில் கடும் குளிரான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி..! இருநாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என பேட்டி

Next Post
அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி..! இருநாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என பேட்டி

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி..! இருநாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin