ஐதராபாத்தின் மிகப்பெரிய பணக்காரரின் மகளும், ரூ.1,63,000 கோடி மதிப்புள்ள திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட்டின் முழு நேர இயக்குநருமாக இருந்துவரும் நீலிமா பிரசாத் திவி யார் என்பது குறித்த விரிவான தகவலை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
நீலிமா பிரசாத் திவி, ஜெனரிக் மருந்துகளைத் தயாரிக்கும் திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட்டில் முழுநேர இயக்குநராக (வணிக) இருந்து வருகிறார். ஐதராபாத்தின் மிகப் பெரிய பணக்காரரான டாக்டர் முரளி கே திவியின் மகளான இவர், இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.63 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கொண்ட திவிஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட்டின் நிறுவனரான டாக்டர் முரளி கே திவி, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் இன்டெக்ஸின்படி, இவர் 10.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன், நாட்டின் பணக்கார ஃபார்மா பில்லியனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அவரது மகள் நீலிமா, ஜூலை 2012 முதல் திவிஸ் லேபரேட்டரீஸ் நிறுனத்தில் தனது பங்களிப்பை உறுதி செய்து வருகிறார். பொருள் ஆதாரம் மற்றும் கொள்முதல், பெருநிறுவன நிதி மற்றும் முதலீட்டாளர்களுடனான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இவர் நிர்வகித்து வருகிறார்.
எனினும், தனது தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பாக நீலிமா, விரிவான வணிக நுண்ணறிவு மற்றும் பொருள் தேவைகளை திட்டமிடுதல் மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் பரிச்சயம் பெற்றிருந்தார் என்பது கவனிக்க வேண்டியது.
இதையும் படிக்க: பிரபல நடிகையின் ஆதரவுடன் ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தொடங்கிய சர்வதேச நீச்சல் வீராங்கனை…!
கீதம் வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் சர்வதேச வணிகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள நீலிமா, இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிதியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, திவிஸ் ஃபவுண்டேஷன் ஃபார் கிஃப்டட் சில்ட்ரன் என்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் நீலிமா இருந்து வருகிறார்.
நிறுவனத்தை நடத்துவதில் தனது தந்தைக்கு உறுதுணையாக இருக்கும் நீலிமா, கடந்த ஆண்டு மே மாதம், ஐதராபாத்தின் புகழ்பெற்ற ஆடம்பர பகுதியான ஜூபிலி ஹில்ஸில் இரண்டு சொத்துக்களை ரூ.80 கோடிக்கு வாங்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த இரு சொத்துக்களும் 11,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Vehicle loan: 3 வருட கடன் காலம் vs 6 வருட கடன் காலம்: புதிய கார் வாங்குவதற்கு எந்த கடன் விருப்பம் சிறந்தது…?
ஐதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனமான திவிஸ் லேப்ஸ், 10க்கும் மேற்பட்ட பொது மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளராக இருந்து வருகிறது.
Hyderabad,Telangana
February 12, 2025 6:39 PM IST
ஐதராபாத்தின் மிகப் பெரிய பணக்காரரின் மகள், ரூ.1,63,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் இயக்குநர்… யார் இந்த நீலிமா?


