Last Updated:
அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகள் க்ரோக்ஸ் காலணிகளுக்கு எதிராகப் போரையே நடத்தி வருகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால், குறைந்தது 20 மாநிலங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகள், மாணவர்கள் வகுப்பிற்கு க்ரோக்ஸ் அணிவதை தடைசெய்துள்ளன.
அமெரிக்கா முழுவதும் உள்ள பல பள்ளிகளில், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் க்ரோக்ஸ் (Crocs) காலணிகள் அணிவதைத் தடை செய்துள்ளன. அமெரிக்காவில் உள்ள அலபாமா, ஜார்ஜியா மற்றும் புளோரிடா பள்ளிகள் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளன.
அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகள் க்ரோக்ஸ் காலணிகளுக்கு எதிராகப் போரையே நடத்தி வருகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால், குறைந்தது 20 மாநிலங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகள், மாணவர்கள் வகுப்பிற்கு க்ரோக்ஸ் அணிவதை தடைசெய்துள்ளன. மேலும், இதையும் மீறி க்ரோக்ஸ் அணிந்து வரும் மாணவர்களை தண்டித்தும் வருகின்றன. க்ரோக்ஸ் காலணி குழந்தைகளுக்கு ஆபத்தானது என்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்தக் காலணியை அணியும் மாணவர்கள் பெரும்பாலும் குதிகால்களுக்குப் பின்னால் உள்ள பட்டையைப் பயன்படுத்தாததால், பள்ளி அதிகாரிகள் இந்த பிரபலமான காலணியைத் தடை செய்துள்ளனர். இந்த காலணி அணிவதால் கீழே விழுதல் மற்றும் தடுமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இன்னும் சில அதிகாரிகளோ, ஆடம்பரமான மற்றும் கண்கவர் வசீகரங்கள் காரணமாக வகுப்பறைகளில் க்ரோக்ஸ் காலணி கவனச் சிதறலுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மாணவர்கள் க்ரோக்ஸ் அணிவதைத் தடுக்க, பள்ளியிலிருந்து இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எந்த அமெரிக்க மாநிலங்கள் பள்ளிகளில் க்ரோக்ஸ் காலணிகளை தடை செய்துள்ளன?
அலபாமா: அலபாமாவில் உள்ள பெஸ்ஸெமர் நகர உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் ஸ்டோனி பிரிட்செட் கூறுகையில், “இது உண்மையில் ஒரு பாதுகாப்பு சம்மந்தமான ஆபத்தாகும். இந்தக் காலணி முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களை முறிக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்குத் தேவையான இயக்க ஆதரவை க்ரோக்ஸ் வழங்குவதில்லை என்றும், பள்ளியில் குழந்தைகள் நடக்கும்போது, பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன” என்றும் அவர் கூறினார்.
ஜார்ஜியா: ஜார்ஜியாவில் உள்ள லேக் சிட்டி தொடக்கப் பள்ளி, மாணவர்கள் தங்கள் ஆடைக் கட்டுப்பாட்டில் கால்களை முழுதாக மூடிய காலணிகளை அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை விதித்துள்ளது மற்றும் க்ரோக்ஸ்களை வெளிப்படையாக தடை செய்துள்ளது.
புளோரிடா: பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தங்கள் ஆடைக் கட்டுப்பாட்டில் “க்ரோக்ஸ் கிடையாது” என்ற வாசகத்துடன் தடை செய்துள்ளன.
இதையும் படிக்க: அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆண் பயணியை தாக்கும் விமான ஊழியர்: வைரல் வீடியோ..!
பள்ளிகள் மட்டுமின்றி டிஸ்னி வேர்ல்டில் உள்ள எஸ்கலேட்டர்களிலும் சில மருத்துவ வசதிகள் மற்றும் ஆய்வகங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக க்ரோக்ஸ் காலணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. “குரோக்ஸ் எளிதில் ஏதாவது உபகரணங்களில் சிக்கிக் கொள்ளலாம். இதனால் குழந்தைகள் கீழே விழுந்து காலில் காயம் ஏற்படலாம் அல்லது கால் விரல் நகத்தை கிழித்துவிடலாம். இதெல்லாம் அலுவலகத்தில் நான் தினமும் பார்த்து வருகிறேன்” என டாக்டர் பிரியா பார்த்தசாரதி கூறுகிறார்.
இதையும் படிக்க: 5 ஆண்டுகளாக குளிக்காத அமெரிக்க மருத்துவர்… காரணம் இதுதானாம்…!
“இது அன்றாடம் அணிந்து செல்வதற்கு ஏற்ற ஒரு வசதியான, சாதாரண ஷூ ஆகும். நாங்கள் இதை சிறப்பான அல்லது செயல்திறன் கொண்ட பிராண்டாக சந்தைப்படுத்தவில்லை” என்று க்ரோக்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
February 12, 2025 1:55 PM IST


