• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: இனி குறையுமா? – வியாபாரிகள் சொல்வது என்ன? | gold price hike sets new record

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: இனி குறையுமா? – வியாபாரிகள் சொல்வது என்ன? | gold price hike sets new record
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60,200-க்கு விற்பனையானது. 24-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,440-க்கும், 29-ம் தேதி ரூ.60,760-க்கும் விற்பனையானது.

30-ம் தேதி ஒரு பவுன் ரூ.60,880-க்கு விற்பனையானது. மறுநாள் 31-ம் தேதியன்று ஒரு பவுன் தங்கம் ரூ.960 ஆக அகரித்து ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது. பிப்.1-ம் தேதியன்று பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

அன்றைய தினம், சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,790-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், கடந்த 5-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.63,240 உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.

இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.64,480-க்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம், தங்கம் விலை ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.70,336-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் குறியீடு வலுவடைந்து வருகிறது. அத்துடன், அமெரிக்க டாலரும் ரூ.87.50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

இவை தவிர, அமெரிக்க அதிபரின் பொருளாதாரக் கொள்கைகள், பங்குச் சந்தை சரிவு, ரியல் எஸ்டேட் சரிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு உள்ளிட்டவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதே தவிர, குறைவதற்கான வாய்ப்பு கம்மியாக உள்ளது’’ என்றார்.

தங்கம் விலை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருவதைக் கண்டு, நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். வெள்ளி விலை நேற்று எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,07,000 ஆக உள்ளது.



Read More

Previous Post

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல்: தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | team india to play with england in third odi today in ahmedabad

Next Post

உலகில் ஒரு இந்தியர்கள் கூட இல்லாத நாடு எது தெரியுமா?

Next Post
உலகில் ஒரு இந்தியர்கள் கூட இல்லாத நாடு எது தெரியுமா?

உலகில் ஒரு இந்தியர்கள் கூட இல்லாத நாடு எது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin