• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“மனிதர்களின் தலை எழுத்தை AI தீர்மானிக்கிறது”

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“மனிதர்களின் தலை எழுத்தை AI தீர்மானிக்கிறது”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 11, 2025 9:57 PM IST

பிரான்ஸ் ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது எனக் கூறினார்.

News18News18
News18

இரண்டு நாடுகள் பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி இன்று தலைமை வகித்தார்.

பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் சென்ற பிரதமர், மழைக்கு நடுவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தரையிறங்கினார். அவருக்கு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புடன் அரசு முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாரீஸில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மேள தாளங்கள் முழங்க “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” பாடல் பாடி இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அரசின் உயரதிகாரிகள், மாகாண பிரதிநிதிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாரீஸில் இன்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டிற்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படும் என அச்சம் இருக்கிறது. ஆனால் உண்மையில் தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போவதில்லை என்பதுதான் வரலாறு காட்டுகிறது.

21ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்மை ஒன்றிணைக்கிறது. விவசாயம் மற்றும் கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கவல்லது” எனத் தெரிவித்தார்.

First Published :

February 11, 2025 9:57 PM IST

Read More

Previous Post

ரகசிய அறிக்கையில் முறைகேடு; இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

Next Post

சட்ட விரோதமாக பணிபுரிகிறார்களா? இந்திய ஓட்டல்களில் இங்கிலாந்து போலீசார் திடீர் | Makkal Osai

Next Post
சட்ட விரோதமாக பணிபுரிகிறார்களா? இந்திய ஓட்டல்களில் இங்கிலாந்து போலீசார் திடீர் | Makkal Osai

சட்ட விரோதமாக பணிபுரிகிறார்களா? இந்திய ஓட்டல்களில் இங்கிலாந்து போலீசார் திடீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin