Last Updated:
சமீபத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் கிக் தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நாட்டின் பல்வேறு ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மோடி அரசு தயாராகி வருகிறது. விரைவில் இந்த பரிந்துரை தொழிலாளர் துறையின் பரிசீலனைக்கு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. பணியின்போது கிக் தொழிலாளர்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர்களின் வருமானத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை ‘சமூக பாதுகாப்பு பங்களிப்பு’ கீழ் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் கிக் தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அடையாள அட்டைகளை வழங்குவது உள்ளிட்ட இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ‘பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா’ மூலம் அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த நடவடிக்கையானது கிட்டத்தட்ட 1 கோடி கிக் தொழிலாளர்களுக்கு உதவும் என்று அவர் கூறினார்.
கிக் தொழிலாளர்கள் என்பது Swiggy, Rapido, Ola, Zomato, Uber, Amazon போன்ற ஆன்லைன் சேவைகளில் நிதித் தேவைகளுக்காக சில நாட்கள் அல்லது சில மணி நேரங்கள் வேலை செய்பவர்கள். அவர்களின் பணி தற்காலிகமானது, அவர்களின் வருமானமும் தற்காலிகமானது. மாதச் சம்பளம் இல்லை. அதனால்தான், கிக் தொழிலாளர்கள் செய்யும் ஒவ்வொரு சேவை பரிவர்த்தனையில் இருந்தும் மத்திய தொழிலாளர் துறை குறிப்பிட்ட சதவீதத்தை அவ்வப்போது சமூகப் பாதுகாப்புக் கட்டணத்திற்காக வசூலிக்கும். ஓய்வூதியத்திற்காக ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் எவ்வளவு சதவீதம் வசூலிக்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற ஆன்லைன் சேவை வழங்குநர்களின் பில்களில் இருந்து இந்தத் தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. கிக் தொழிலாளர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்லைன் சேவைகளில் பணிபுரிந்தாலும் இந்த ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பயனடையலாம்.
இதையும் படிக்க: குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்.. ரூ.10-க்கு ‘ஸ்பின்னர்’ குளிர்பானத்தை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ்
கிக் தொழிலாளர்கள் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க இரண்டு வழிகள் வழங்கப்படும். ஒன்று, ஓய்வுபெறும்போது ஓய்வூதியக் கணக்கில் குவிக்கப்பட்ட பணத்தின் மீதான வட்டியை திரும்பப் பெறுவது. மற்றொன்று, ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை பல இஎம்ஐ-களாகப் பிரித்து, தவணை முறையில் அந்த தொகையை வங்கிக் கணக்கில் எடுப்பது ஆகியவை ஆகும்.
இதையும் படிக்க: PF | UMANG ஆப் மூலம் உங்கள் PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ..!
இ-ஷ்ரம் போர்டல் ஆனது ஆகஸ்ட் 2021இல் தொடங்கப்பட்டது. அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து அவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனவரி 27, 2025க்குள், நாடு முழுவதும் உள்ள 30.58 கோடி அன்ஆர்கனைஸ்டு ஒர்க்கர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இதுவரை மத்திய அரசின் பல்வேறு துறைகளின் 12 திட்டங்கள் இ-ஷ்ராமுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
February 11, 2025 2:58 PM IST


