
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம்சமர்ப்பித்த பரிந்துரை தொடர்பான நிலைப்பாடு இன்று (10) அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய உள்நாட்டின் எரிவாயு விலையை திருத்துவதற்கான ஒப்புதல் பெறுவதற்காக பரிந்துரைகளை லிட்ரோ நிறுவனம் நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தது.
அத்துடன், எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
எனினும், இதுவரையிலும் எரிவாயு விலை திருத்தத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்த நிலையில், விலை திருத்தம் தொடர்பாக நிலைப்பாட்டை நிதி அமைச்சு இன்று (10) வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு திருத்தத்திற்கு அமைய புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று லாஃப் நிறுவனமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

