பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஏன்?
இந்த நிலையில் தவெக தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி வருகிறார். தற்போதைய அரசியல் நிலவரம், தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபேக் என்ற நிறுவனம் மூலம் தேர்தல் வியூக பணிகளை செய்து வந்த நிலையில் தற்போது தேர்தல் வியூக வகுப்பு தொடர்பான பணிகளில் இருந்து முழுமையாக விலகி பீகாரில் தீவிர அரசியலில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வருகிறார். ஜன் சுராஜ் என்ற இயக்கத்தின் மூலம் மக்களை சந்தித்த அவர், நேரடி தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

