Last Updated:
டிரம்ப், அமெரிக்கா மீது கூடுதல் வரி விதித்தால் அதே அளவு வரியை மற்ற நாடுகள் மீதும் விதிப்போம் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மீது கூடுதல் வரி விதித்தால் அதே அளவு வரியை மற்ற நாடுகள் மீதும் விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். கடந்த வாரம் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அடையாளம் கண்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தினார். இதில், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால் விலங்கிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் விவாதமான நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது வழக்கமான நடவடிக்கை தான். ஆனால், அமெரிக்க அரசுடன் இது தொடர்பாக பேசிவருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் முடிவதற்குள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்த டிரம்ப், “இந்த புதிய வரி திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது” என்றார்.
எந்த நாடு தங்கள் மீது கூடுதல் வரி விதித்தாலும் அந்த நாடுகள் மீது அமெரிக்கா அதே அளவு வரி விதிக்கும் என்றும் குறிப்பிட்டார். மற்ற நாடுகளில் கார்கள் மீதான வரி அதிகம் உள்ள நிலையில் அமெரிக்காவில் கார்கள் மீதான வரி வெறும் இரண்டரை விழுக்காடு மட்டுமே என டிரம்ப் கூறினார். பதில் வரி முறையை அமல்படுத்துவது குறித்தும் டிரம்ப் இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
February 10, 2025 6:01 PM IST


