உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால்,
தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று(24) கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் தனக்கு உண்மை
தெரியும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி
இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிய நான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில், இனியும் காத்திருக்காமல் உயிர்த்
தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி
ஆட்சியில் வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் உண்மையை வெளிப்படுத்தும், தேசிய
சர்வதேச பங்குதாரர்களை ஈடுபடுத்திக் கொண்ட விசாரணை ஊடாக உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)