Last Updated:
டெல்லி தேர்தலில் காங்கிரஸ் ஹாட்ரிக் தோல்வி பெற்றாலும், வாக்கு சதவிகிதம் 6.34% ஆக உயர்ந்துள்ளது. 1998-2013 வரை ஆட்சி செய்த காங்கிரஸ், 2015, 2020, 2023 தேர்தல்களில் வெற்றி பெறவில்லை.
டெல்லியில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத காங்கிரஸ், பூஜ்ஜியத்தில் ஹாட்ரிக் அடித்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்த காங்கிரஸ், தற்போது தொடர்ந்து 3-வது முறையாக வொயிட் வாஷ் ஆகியுள்ளது. 1998-ஆம் ஆண்டு இறுதியில் டெல்லி முதலமைச்சராக ஷீலா தீட்சித் பதவியேற்றார். அவர் 2013 வரை பதவி வகித்தார். 2010-ஆம் ஆண்டு ஷீலா தீட்சித்தின் 3-வது ஆட்சிக் காலத்தில் தான் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. உலகத் தரத்தை மிஞ்சும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தாலும், ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்தத் தேர்தல் தான் காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெற்ற கடைசித் தேர்தல் ஆகும். அதன்பின்னர் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியையே சந்தித்தது. காங்கிரசின் வாக்கு சதவிகிதம் 9.7 சதவீதமாக குறைந்தது. இதேபோல் 2020-ஆம் ஆண்டிலும் 66 தொகுதிகளில் வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியது.
அப்போதும் அக்கட்சியின் வேட்பாளர்கள் 63 பேர் டெபாசிட் இழந்தனர். வாக்கு சதவிகிதமும் 4.26-ஆக சுருங்கியது. தற்போதைய தேர்தலில் 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் ஹாட்ரிக் தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் வாக்கு சதவிகிதம் மட்டும் 6.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Delhi,Delhi,Delhi
February 09, 2025 6:54 AM IST


