• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பெரும் அழிவைச் சந்தித்து வரும் விலங்குகள்… சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பெரும் அழிவைச் சந்தித்து வரும் விலங்குகள்… சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 09, 2025 6:58 PM IST

சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியில், உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News18News18
News18

உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் கோடிக்கணக்கான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் உள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

1985-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரையான காலத்தில், 628 வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் தன்மை குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதாவது, விலங்குகளின் உரோமம், மலம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களில் ஆய்வுசெய்யப்பட்டன. இதில், மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், அந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பறவைகள் மற்றும் பாலூட்டி உயிரினங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் வேறுபாடு இருப்பதால், அவை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிட்னி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கேத்தரின் குரூபர், ”குறிப்பிட்ட பிராந்தியம் என்று இல்லாமல், உலகம் முழுமைக்கும் உயிரி பரவல் குறைய வாய்ப்பு உள்ளதாக” தெரிவித்தார். குறிப்பாக, சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதே இதற்கு உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

மரபணு பரவல் தன்மை குறையும்போது, புதிதாக உருவாகும் நோய்கள், வெப்ப அலை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற எதிர்கால சவால்களை அந்த குறிப்பிட்ட விலங்குகளால் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். மனிதர்கள் குடியேற்றம், மனிதர்களால் உருவான காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களால், விலங்குகளின் எண்ணிக்கை குறையும் நிலை இருப்பதாகவும் குரூபர் தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சல் காரணமாக, உலகம் முழுவதும் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், விலங்குகள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், மரபணு பரவல் அளவு அதிகரித்துள்ளதை ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

First Published :

February 09, 2025 6:58 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பெரும் அழிவைச் சந்தித்து வரும் விலங்குகள்… சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Read More

Previous Post

1,000-ஐ நோக்கிய ‘அற்புதன்’ ரஷீத் கான் – ஒரு புள்ளி விவர அலசல்! | Rashid Khan Going to Reach 1000 Wickets – Statistical Analysis

Next Post

சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையுடனான துப்பாக்கி சண்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொலை | Makkal Osai

Next Post
சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையுடனான துப்பாக்கி சண்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொலை | Makkal Osai

சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையுடனான துப்பாக்கி சண்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin