Last Updated:
இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர்த்து மற்ற அனைத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவிந்திரா காயமடைந்ததற்கு பாகிஸ்தான் மைதானத்தின் மோசமான விளக்குகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 330 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இந்த போட்டியின் 37-ஆவது ஓவரின் போது, தன்னை நோக்கி வந்த பந்தை கேட்ச் பிடிக்க ரச்சின் முயன்றார்.
ஆனால், அந்த பந்து நேரடியாக அவர் கண்களுக்கு அருகே நெற்றியில் கடுமையாக தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் ரத்தம் சொட்ட சொட்ட களத்திலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெற்ற லாகூர் மைதானத்தின் மோசமான விளக்குகளே ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததற்கு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மோசமான விளக்குகளால்தான் ரச்சினால் பந்தை சரியான முறையில் கணிக்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர்த்து மற்ற அனைத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அங்குள்ள மைதானங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ரச்சின் ரவிந்திராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மட்டுமின்றி ஐசிசியும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
February 09, 2025 4:38 PM IST


