Last Updated:
கோமா நகரில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். இந்த நகரை எம் 23 கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றுவதற்கு ரூவாண்டா நாடு உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மேலும் சரண் அடைந்தவர்களை அரசு சிறைக் கைதிகளாக அடைத்து தண்டனை கொடுத்து வருகிறது.
இருப்பினும் கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது அதிரடி தாக்குதல்களை நடத்தி அரசுக்கு தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி எம் 23 என்ற கிளர்ச்சி குழுவினர் கோமா என்ற நகரத்தை கைப்பற்றினர்.
அப்போது அங்கிருந்த மிகப்பெரும் சிறை உடைக்கப்பட்டதில் அதிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பிச் செல்லத் தொடங்கினர். அந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் சிறைக் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆண் கைதிகள் சிறையை தீயிட்டு கொளுத்தியதில் அதில் இருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உயிருடன் தீயில் எரிந்து கருகினர். இந்த விபரங்களை ஐநா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோமா நகரில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். இந்த நகரை எம் 23 கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றுவதற்கு ரூவாண்டா நாடு உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோமா நகரத்தை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின்போது மொத்தம் 2900 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2000 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்ற 900 சடலங்கள் ஆங்காங்கே சிதைந்து கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
February 08, 2025 10:15 PM IST
100-க்கும் மேற்பட்ட பெண் சிறைக் கைதிகள் பாலியல் பலாத்காரம்.. உயிருடன் எரிக்கப்பட்டதாக ஐநா அதிர்ச்சி தகவல்


