• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை!

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி தொடர்ந்து பின்னடைவில் உள்ளனர். மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காலை 10.50 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணைய இணையதளத் தரவுகளின்படி பாஜக – 40, ஆம் ஆத்மி – 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்(பட்லி தொகுதி) மட்டும் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!

புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதலில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், 386 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்கைவிட முன்னிலையில் இருந்தார். மீண்டும் தற்போது(11 மணி) 225 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் தில்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷியும் தொடர்ந்து பின்னடைவில்(1,700 வாக்குகள் வித்தியாசம்) உள்ளார்.

Read More

Previous Post

வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை தெரியுமா…..

Next Post

ஈஸ்ட் பெங்காலுடன் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா சென்னையின் எஃப்சி? | East Bengal, Chennaiyin FC in battle to keep playoff hopes alive

Next Post
ஈஸ்ட் பெங்காலுடன் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா சென்னையின் எஃப்சி? | East Bengal, Chennaiyin FC in battle to keep playoff hopes alive

ஈஸ்ட் பெங்காலுடன் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா சென்னையின் எஃப்சி? | East Bengal, Chennaiyin FC in battle to keep playoff hopes alive

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin