• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Student Credit Card | மாணவர் கிரெடிட் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா…? விண்ணப்பிப்பது எப்படி? தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன?

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Student Credit Card | மாணவர் கிரெடிட் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா…? விண்ணப்பிப்பது எப்படி? தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஒரு தனி நபரின் கடன் தகுதி அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை வைத்து மதிப்பிடப்படும் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்துதான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். பொதுவாக, கிரெடிட் கார்டுகளை, சம்பளதாரர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள்தான் வாங்குகிறார்கள். ஆனால், மாணவர்களுக்கென பிரத்யேகமான கிரெடிட் கார்டுகளும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை, நீங்களும் மாணவராக இருந்தால் இந்த மாணவர்களுக்கான கிரெடிட் கார்டை பெறுவது எப்படி? என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

மாணவர்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழையும்போது, ஒரு கிரெடிட் கார்டைப் பெறுவது ஒன்றும் எளிதான காரியமாக இருக்காது. ஏனெனில், வங்கிகள் ஒருவருக்கு கிரெடிட் கார்டை வழங்குவதற்கு முன்பாக, கிரெடிட் ஸ்கோர், மாதாந்திர வருமானம், வேலைவாய்ப்பு போன்ற முக்கிய நிபந்தனைகளை முன்வைக்கிறது. இதனை கடந்துதான் ஒருவர் கிரெடிட் கார்டு அல்லது கடனைப் பெற முடியும். அந்த வகையில், மாணவர்கள் மேற்குறிப்பிட்டவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம்.

எனவே, இதனைப் போக்கும் விதமாக, வங்கிகள் சில தளர்வான தகுதி அளவுகோல்களுடன் மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அதன்படி, அவை தனி கிரெடிட் கார்டுகளாகவோ அல்லது குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் முதன்மை கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் கூடுதல் கார்டாகவோ இருக்கலாம். அதன்படி, மாணவர்களுக்கான கிரெடிட் கார்டை பெறுவதற்கான தகுதி, ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறைகளை இனி பார்ப்போம்.

மாணவர் கிரெடிட் கார்டு பெற தகுதி என்ன?

பொதுவாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரருக்கு மாணவர் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்க வேண்டும். மேலும், அவர் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

மாணவர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான முக்கிய ஆவணங்களில் ஆதார் கார்டு, பேன் கார்டு, சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஐடி கார்டு ஆகியவை அடங்கும்.

விண்ணப்பிக்கும் செயல்முறை

இந்த, கூடுதல் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, வங்கியில் ஏற்கனவே கிரெடிட் கார்டு பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, விண்ணப்பதாரரின் பேன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

மாறாக, நிலையான வைப்புத்தொகையை வைத்து கிரெடிட் கார்டைப் பெறும்போது, ​​விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிக்க: EPF Withdrawal: அவசர பண தேவையா..? – PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி..? இதோ வழிமுறை

இவ்வாறாக ஒரு மாணவர் கிரெடிட் கார்டைப் பெறுவதால், ​அது மாணவரின் அவசர காலத்தில் உதவியாக இருப்பதுடன், அதை சரியாக திருப்பி செலுத்தும் பட்சத்தில் நல்ல கிரெடிட் ஸ்கோரை நிர்வகிப்பது போன்ற நன்மைகளையும் பெற உதவும். இருப்பினும், இது சில குறைபாடுகளையும் கொண்டிருக்கலாம்.

கிரெடிட் கார்டை பயன்படுத்தி குறிப்பிட்ட வரம்பு வரை பயன்படுத்தும் வசதி இருக்கிறது. இது சில நேரங்களில், மாணவர்களின் அதீத பயன்பாட்டுக்கு வழிவகுத்து, அவர்களை கடன் பொறியில் சிக்க வைக்க காரணமாகலாம். மேலும், வழக்கமான கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​மாணவர் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்கள் விதிக்கப்படலாம்.

இருப்பினும், பயனர்கள் அதன் சாத்தியமான தவறான பயன்பாடு மற்றும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துவது நல்லது.

First Published :

February 08, 2025 8:12 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Student Credit Card | மாணவர் கிரெடிட் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா…? விண்ணப்பிப்பது எப்படி? தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன?

Read More

Previous Post

ஆந்திராவில் ‘வாட்ஸ் அப்’பில் ஹால் டிக்கெட்: மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி | Intermediate students in AP can download hall tickets for practical exams

Next Post

Garis panduan: PM akan bawa hasil mesyuarat Kabinet kepada pengerusi MKI | Makkal Osai

Next Post
Garis panduan: PM akan bawa hasil mesyuarat Kabinet kepada pengerusi MKI | Makkal Osai

Garis panduan: PM akan bawa hasil mesyuarat Kabinet kepada pengerusi MKI | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin