• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஸ்டான்போர்டில் பட்டம் பெற்ற கோடீஸ்வரரின் மகள்; இஷா அம்பானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஸ்டான்போர்டில் பட்டம் பெற்ற கோடீஸ்வரரின் மகள்; இஷா அம்பானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 07, 2025 11:16 AM IST

நந்தினி சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றுள்ளார்.

News18News18
News18

இந்தியா ஏராளமான கோடீஸ்வர தொழிலதிபர்களின் தாயகமாக இருந்து வருகிறது. இவர்களில் பலர் தங்கள் குடும்பத்தின் தொழில்முனைவோர் மரபை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர். பிரமல் குழுமத்தின் (Piramal Group) தலைவரான கோடீஸ்வரர் அஜய் பிரமலின் மகள் நந்தனி பிரமல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவர் குறித்து வெளியே பலருக்கும் தெரியாவிட்டாலும், நந்தினி தனது குடும்ப வணிகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். பிரமல் குழுமத்தின் வெற்றியில் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இயக்குநர்கள் குழு உறுப்பினர், பிரமல் எண்டர்பிரைசஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் பிரமல் பார்மாவின் தலைவர் என ரூ.9,087 கோடி மதிப்புள்ள நிறுவனமான பிரமல் குழுமத்தில் நந்தினி முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். பிரமல் குழுமத்தின் வெற்றியை முன்னெடுப்பதற்காக, தனது பெற்றோர் அஜய் மற்றும் டாக்டர் ஸ்வாதி பிரமல் மற்றும் சகோதரர் ஆனந்த் பிரமல் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்.

உலகளாவிய வணிகம் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குவதில் இவர் ஒரு முன்னோடி நபராக உள்ளார். பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராகவும், பிரமல் பார்மா லிமிடெட்டின் தலைவராகவும் செயல்படும் இவர், தனது புதுமையான எண்ணம் மற்றும் தொலைநோக்கு பார்வையால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது புத்திசாலித்தனமான தலைமையின் கீழ், பிரமல் பார்மா குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு துடிப்பான மற்றும் செயல் ஊக்கமுள்ள தலைவராக நந்தினியின் நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது.

நந்தினியின் சாதனைகளைப் பற்றி சொல்லும் போதெல்லாம், நமக்கு தானாகவே அவரது குடும்ப உறவுகளின் மீது கவனம் வருவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக அவரது சகோதரர் ஆனந்த், இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், நந்தினியின் வெற்றிப் பயணம் சுயாதீனமானது. அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் தனித்துவமான தலைமைத்துவ திறன்களால் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனைக்கான ஒரு தனித்துவமான பாதையை செதுக்க அவருக்கு இதுவே பெரிதும் உதவியது.

நந்தினி சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றுள்ளார். 2006-ல் தனது குடும்பத்திற்கு சொந்தமான தொழிலில் சேருவதற்கு முன்பு, அவர் மெக்கின்சி & கம்பெனியில் வணிக ஆய்வாளராகப் பணியாற்றினார்.

நந்தினியின் சொத்து மதிப்பு பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. ஆனால், அவரது தந்தையின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2023 நிதியாண்டில் பிரமல் குழுமத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.9,087 கோடி ஆகும். நந்தினி 2009-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டில் தன்னுடன் படித்த சக மாணவர் பீட்டர் டியோங்கை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிக்க: Repo Rates: ரெப்போ விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு… எவ்வளவு வட்டி குறையும்?

பீட்டர் பிரமல் குளோபல் பார்மாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பிரமல் பார்மாவின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டங்களையும் பெற்றுள்ள அவர், மெக்கின்சி & கம்பெனியில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

First Published :

February 07, 2025 11:16 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஸ்டான்போர்டில் பட்டம் பெற்ற கோடீஸ்வரரின் மகள்; இஷா அம்பானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

Read More

Previous Post

எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் முன்ஜாமீன்

Next Post

வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ – அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி! | is china USA Trade war will happen?

Next Post
வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ – அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி! | is china USA Trade war will happen?

வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ - அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி! | is china USA Trade war will happen?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin