Last Updated:
RBI ரெப்போ விகிதத்தை குறைப்பது குறித்து முடிவு செய்யும் நிலையில், பல வங்கிகள் FD வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன
பிப்ரவரி 7ஆம் தேதி (இன்று) நடைபெறும் பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதங்களைக் குறைப்பது குறித்து முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் பேங்க் (PNB), ஆக்சிஸ், ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், கர்நாடகா பேங்க் மற்றும் ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட பல வங்கிகள் இந்த கூட்டத்திற்கு முன்னதாகவே சில நாட்களுக்கு முன்பு தங்களது FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கண்ட வங்கிகள் தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றின. அந்த வகையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் 60 வயதிற்கு உட்பட்ட பொது குடிமக்களுக்கான FD திட்டங்களுக்கானவை…
பஞ்சாப் நேஷ்னல் பேங்க்:
பஞ்சாப் நேஷ்னல் வங்கியானது 7% வட்டி விகிதத்துடன் கூடிய 303 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட புதிய FD-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல பொது குடிமக்களுக்கு 6.7% வட்டி விகிதத்துடன் கூடிய 506 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட மற்றொரு திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த FD திட்டங்கள் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கி கூறியுள்ளது. அதேபோல் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் காலத்தை கொண்ட திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில் அதிகபட்ச வட்டி விகிதமான 7.25 சதவீதத்தை 400 நாள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்கு வங்கி வழங்குகிறது.
ஷிவாலிக் சிறு நிதி வங்கி (SFB):
SFB-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வங்கி அதன் FD-க்கான வட்டி விகிதங்களை புதுப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வங்கி வழங்கும் FD-களுக்கான வட்டி விகிதங்கள் பொது குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 8.80 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 9.30 சதவீதம் வரையிலும் உள்ளன. ஜனவரி 22 முதல் புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.
கர்நாடக வங்கி:
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை இந்த வங்கி வழங்குகிறது. 375 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.50 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஜனவரி 2ஆம் தேதி முதல் வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: “UPI சேவைகள் செயல்படாது..” – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:
ரூ.3 கோடிக்கும் கீழ் உள்ள FD-க்கான வட்டி விகிதம் வங்கியால் மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்கான வட்டி விகிதங்கள் தற்போது 3.5 சதவீதம் முதல் 7.30 சதவீதம் வரை உள்ளன. 60 வயதிற்குட்பட்டவர்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதமான 7.30%, வங்கியின் 456 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஆக்சிஸ் பேங்க்:
ரூ.3 கோடிக்கு கீழ் மற்றும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட FD திட்டங்களில் பொது குடிமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை ஆக்சிஸ் பேங்க் வழங்குகிறது. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க: வீடு புதுப்பிக்க கடன் வாங்கப் போறீங்களா…? தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் இவைதான்…!
ஃபெடரல் பேங்க்:
இந்த வங்கி பொதுமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 444 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டத்திற்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.50 சதவீதம் வழங்குகிறது இந்த வங்கி. கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
February 07, 2025 7:19 AM IST


