• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வீடு புதுப்பிக்க கடன் வாங்கப் போறீங்களா…? தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் இவைதான்…!

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வீடு புதுப்பிக்க கடன் வாங்கப் போறீங்களா…? தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் இவைதான்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


News18News18
News18

நாம் வாழும் வீடு வெறும் தங்குவதற்கான இடம் மட்டுமல்ல; அது நம் ஆளுமை. ஆசை, லட்சியம் ஆகியவற்றிற்கான அடையாளம். இப்போது நீங்கள் இருப்பது புதிய வீடோ அல்லது ஏற்கனவே பல வருஷங்களாக வாழ்ந்துவரும் வீடோ, நமக்கு ஏற்றார்போல், நமக்கு பிடித்ததைப்போல் வீட்டை வடிவமைக்க நம் எல்லாருக்குமே ஆசை இருக்கும். காலநிலை மாற்றம் அல்லது இயற்கை அசம்பாவிதங்கள் ஆகியவற்றிலிருந்து வீட்டை பாதுகாக்க, நாம் அதை அடிக்கடி பழுதுபார்த்து சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.

வண்ணம் தீட்டுவது, கதவு ஜன்னல்களை மாற்றுவது, வீட்டை செப்பனிடுவது என இதற்கு நிறைய செலவாகும். இதற்காகவே பலர் தங்கள் வீடுகளை பல வருடங்களாக புதுப்பிக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவதற்காக இருப்பதுதான் வீட்டு புதுப்பிப்பு கடன்.

வீடு புதுப்பிப்பு கடன் என்றால் என்ன?

உங்கள் வீட்டை புதுப்பிக்க, மாற்றியமைக்க, மேலும் வசதியை அதிகரிக்க இந்த லோன் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் நிதிச்சுமையை குறைப்பதோடு உங்களுக்கு தேவையான முறையில் வீட்டை புதுப்பிக்க தேவையான தொகையைத் தரும். வீடு புதுப்பிப்பு கடனில் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிதாக வீடு கட்ட வாங்கும் லோன் போல் அல்லாமல் நாம் செய்யப்போகிற புதுப்பிப்பு வேலைகளுக்கான தொகையை மட்டும் கடனாக பெற்றுக்கொள்ள முடியும்.

வீடு புதுப்பிப்பு கடனில் உள்ள சிறப்பம்சங்கள்:

குறைவான வட்டி விகிதம்:

பலரும் தங்கள் வீட்டை புதுப்பிக்க தனிநபர் கடனை தான் பெரிதும் நாடுவார்கள். ஆனால், தனிநபர் கடனுக்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதே சமயம் வீடு புதுப்பிப்பு கடனுக்கான வட்டி, ஓரளவுக்கு வீட்டு லோன் அளவிற்கே இருக்கும்.

வரிச் சலுகை:

வீடு புதுப்பிப்பு கடனில் உள்ள முக்கியமான அம்சம், இதிலுள்ள வரிச்சலுகை. வரிமான வரிச் சட்டம் பிரிவு 24-ன் படி, வருடத்திற்கு ரூ.30,000 வரை வட்டித்தொகையில் விலக்கு பெறலாம்.

விரைவாக கிடைக்கும்:

வீடு புதுப்பிப்பு கடனுக்கு குறைவான ஆவணங்களே தேவைப்படுவதால், விண்ணப்பித்த உடனேயே கடன் தொகை தரப்படும். ஆகையால், எந்த தாமதமும் இன்றி உங்கள் வீட்டை புதுப்பிக்க முடியும்.

குறைவான ஆவணம்:

வீடு புதுப்பிப்பு கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது அடையாளச் சான்று, வீட்டுப் பத்திரம், புகைப்படம் போன்ற சில ஆவணங்களை மட்டுமே சமர்பிக்க வேண்டும்.

இதையும் படிக்க: “UPI சேவைகள் செயல்படாது..” – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி

வீடு புதுப்பிப்பு கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாளச் சான்று.
  • முழுமையான விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
  • நீங்கள் வருமானம் பெறுவதற்கான சான்று அல்லது வருமான வரி செலுத்தியதற்கான அறிக்கை அல்லது ஃபார்ம் 16 ஆகிய ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்கள் நிதி நிலைமையை அறிந்துகொள்ள, கடந்த ஆறு மாத காலத்திற்கான வங்கி ஸ்டேட்மென்ட்
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
  • நீங்கள் புதுப்பிக்கப்போகும் வீட்டின் அசல் பத்திரம்.
  • வீட்டை புதுப்பிக்க எவ்வளவு செலவாகும் என்பதற்கான தோராயமான மதிப்பீடு.
First Published :

February 06, 2025 2:42 PM IST

Read More

Previous Post

கில், ஸ்ரேயாஸ், அக்சர் பொறுப்பான ஆட்டம்: இந்தியா வெற்றி | IND vs ENG 1st ODI | shubman Gill Shreyas Axar lead India to victory in first ODI versus england

Next Post

மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய் சாடல் | Makkal Osai

Next Post
மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய் சாடல் | Makkal Osai

மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய் சாடல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin