செந்தூல் ஸ்ரீ திரெங்கானு அடுக்குமாடி குடியிருப்பின் 10-ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.
கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்பு இலாகா வெளியிட்ட ஓர் அறிக்கையில், இன்று பின்னிரவு 12.38 மணி அளவில் அவசர அழைப்பு பெற்றதை தொடர்ந்து செந்தூல், தித்திவங்சா, ஹங் துவா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் விரைந்தனர்.
இந்த தீ சம்பவத்தில் 50 வயது இந்தோனேசிய பெண், குளியலறையில் இறந்து கிடந்ததை சுகாதார அமைச்சு அதிகாரி உறுதிப்படுத்தினார்.
அப்பெண்ணின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


