Last Updated:
2023 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளிப்படுத்திய அதே ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் விளையாடுவோம் என்று கூறினார்.
இந்திய அணியுடன் 5 டி20 தொடர்களும், 3 ஒருநாள் தொடர்களிலும் விளையாட இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் டி20 தொடர்களில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஒருநாள் போட்டித்தொடர் இன்று தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடம், பத்திரிகையாளர் ஒருவர், “ஒருநாள் போட்டிகளில் ஹிட்மேன் என பெயரெடுத்த நீங்கள், தற்போது தைரியமாக களமிறங்குகிறீர்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் பெரிதாக சோபிக்கவில்லையே?” என கேள்வி எழுப்பினர்.
இதனைக் கேட்ட ரோகித் சிரித்துக்கொண்டே, “என்ன மாதிரியான கேள்வி இது?” என்று கேட்டு, “இது முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நானும் பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள். ஒவ்வொரு தொடரும் ஒரு புதிய தொடர். சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை. என் முன்னால் இருக்கும் சவால்களில் மட்டுமே எனது கவனம் இருக்கிறது. தொடரை சிறப்பாகத் தொடங்க முயற்சிப்பேன்.” என்றார்.
தொடருக்கான அணியின் அணுகுமுறை குறித்து பேசிய ரோகித், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளிப்படுத்திய அதே ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் விளையாடுவோம் என்று கூறினார். “நாங்கள் ஒரு குறிப்பிட்ட பாணியில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம். உலகக் கோப்பையில் எப்படி விளையாடினோமோ, அதேபோல் விளையாட முயற்சிப்போம். ஆனால் உலகக் கோப்பை நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே ஒரு அணியாக மீண்டும் இணைந்து, இந்த தொடருக்கான உத்தியை வகுக்க வேண்டியுள்ளது” என்று ரோகித் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கிறாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கொடுத்த மெசேஜ்
மேலும் இங்குள்ள வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டியதில்லை. ஒரு தொடருக்கு முன் எப்படி தயாராக வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியும். அணி அவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறது என்றும் அவர்களுக்கே தெரியும் என குறிப்பிட்டார்.
February 06, 2025 11:49 AM IST


