02
ஜப்பான்: ஜப்பானில் வசந்த காலம் என்பது மிதமான வெப்பநிலையுடன், தெளிவான வானம் மற்றும் செர்ரி பூக்கள் நிறைந்த ஓர் கண்கவர் காட்சிகளைக் கொண்ட சிறந்த காலமாக பார்க்கப்படுகிறது. இந்த காலத்தில் தான் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால், மரங்களுக்கு அடியில் பூக்களை ரசித்தவாறு பயணம் செய்யலாம். இதுவே, ஜப்பானை பார்வையிட சிறந்த நேரமாக கூறப்படுகிறது, பொதுவாக இந்த நேரத்தில்தான் வெளிநாட்டினர் முதல் உள்ளூர் வாசிகள் வரை மக்கள் கூட்டம் அலைமோதுவதால், அதிக கூட்ட நெரிசலாக காணப்படுவதோடு, பயணம், தங்குமிடங்கள் மற்றும் உணவின் விலையில் சற்று அதிகரிப்பை காணலாம்.


