• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. கவுதம் காம்பீர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. கவுதம் காம்பீர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



குறிப்பாக கவுதம் கம்பீர் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை எப்படி கையாள போகிறார் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிக மோசமாக விளையாடிய இருவரும் உள்ளூர் போட்டி தொடரான ரஞ்சி கோப்பையிலும் ரன்கள் குவிக்க தவறினர்.

அதேசமயம் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 765 ரன்களும், ரோஹித் சர்மா 597 ரன்களும் குவித்திருந்தார்கள். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் 2 வீரர்கள் இவர்கள்தான். அதன் பின்னர் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா 2 அரை சதம் அடித்தார். விராட் கோலி குறிப்பிடும்படியாக ரன்கள் எடுக்கவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 19ஆம் தேதி தொடங்க உள்ள சூழலில் அதற்கு முன்னதான தனது கடைசி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. நாளை தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலி ரன்கள் குவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர்கள் கம்பேக் கொடுப்பதற்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எந்த வகையில் உறுதுணையாக இருப்பார் என்பது அவருக்கு சவாலாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பார்க்கும்போது திருப்திகரமாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த முகமது ஷமி இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகு வலி காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க – U19 மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி.. நீடா அம்பானி வாழ்த்து

மேலும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்துவரும் வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மதியம் 1.30 மணி அளவில் நாக்பூர் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான இரு அணி வீரர்கள் விபரம் பின் வருமாறு-

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரனா. ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், பிலிப் சால்ட், ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், மார்க் வுட்.

First Published :

February 05, 2025 2:20 PM IST

Read More

Previous Post

உ.பி. இடைத்தேர்தல்: மில்கிபூரில் சமாஜ்வாதி, பாஜக இடையே கடும் போட்டி! | SP vs BJP clash as voting in Ayodhya’s Milkipur bypoll

Next Post

“காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ளும்!” – ட்ரம்ப் அதிரடி | In shock announcement, Trump says US wants to take over Gaza Strip

Next Post
“காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ளும்!” – ட்ரம்ப் அதிரடி | In shock announcement, Trump says US wants to take over Gaza Strip

“காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ளும்!” - ட்ரம்ப் அதிரடி | In shock announcement, Trump says US wants to take over Gaza Strip

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin