Last Updated:
டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரசும் தீவிரமாகப் பரப்புரை செய்து வந்தன.
பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லி மாநில எல்லையில், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) எண்ணப்பட உள்ளன.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலோடு, தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும், உத்தரப்பிரதேசத்தின் மில்கிபூர் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
February 05, 2025 7:23 AM IST


