கேரளாவில், கோவில் திருவிழாவில் மதம் பிடித்த யானை மற்றொரு யானையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி நடுங்க வைத்துள்ளது. அலறியடித்து ஓடிய பக்தர்களில் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆராட்டுப்புழா ஆலயத்தில் பூரம் உற்சவ விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இறுதி நாளான வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி அளவில், ‘உபசாரம் சொல்லல்’ என்ற ஒரு சடங்கு நடைபெற்றது. சடங்கின் முக்கிய நிகழ்வாக பகவானின் திடம்பு, யானை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவது வழக்கம்.
நிகழ்ச்சி தொடங்கி பக்தர்கள் கூட்டம் அலைமோத மேள தாளங்கள் முழங்கக் களைக்கட்டிய திருவிழாவில், குருவாயூரைச் சேர்ந்த ரவிகிருஷ்ணன் என்ற யானையின் மீது திடம்பு ஏற்றப்பட்டது. பாகன் ஸ்ரீகுமார், யானையை வழி நடத்திச் சென்றார். யானையின் மீது ஆலயத்தைச் சேர்ந்த கீழ் சாந்திகள் அமர்ந்து குடை மற்றும் ஆலவட்டம், வெஞ்சாமரம் ஆகியவற்றைப் பிடித்து ஊர்வலமாக வந்தனர். ரவிகிருஷ்ணன் யானையின் அருகில் புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற வேறொரு யானையும் உடன் வந்தது. aப்போதுதான் அந்த பேரதிர்ச்சி நடந்தேறியது.
#JUSTIN கேரள மாநிலம் ஆராட்டுபுழாவில் கோயில் திருவிழாவில் இரண்டு யானைகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு #Kerala #elephant #TempleFestival #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/0t0n7EsfmD
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 23, 2024
திடீரென்று குருவாயூர் ரவி கிருஷ்ணன் யானை மிரண்டது. தறி கெட்டு அங்கும் இங்கும் ஓட தொடங்கியது. அதை பார்த்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் பீதி அடைந்து சிதறி ஓடினர். வெகு வேகமாக ஓடிய ரவிசங்கர் யானை தனக்கு எதிரே திரும்பி நின்ற அர்ஜுனன் என்ற யானையின் மீது மோதியது. பதிலுக்கு அர்ஜூனன் யானையும் மல்லுக்கட்டியது. இதில் அர்ஜுனன் யானை மீது இருந்த அமர்ந்தவர்கள் வெஞ்சாமரத்துடன் கீழே விழுந்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சிலர் ஓடும்போது தடுக்கி விழுந்து காயம் அடைந்தனர். தகவல் அறிந்து ஆராட்டு புழா காவல் நிலைய போலீசாரும் மற்றும் வனத்துறையினரும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்கள் போராடி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கோவில் திருவிழாவில் முரண்டு பிடித்த யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
