ஜார்ஜ் டவுன்:
இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பினாங்குக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை நடாத்தும் அனைத்து தரப்பினரும், குறிப்பாக சம்பந்தப்பட்ட கோவில்கள் மற்றும் குழுக்கள், இவ்விழா சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, பினாங்கு இந்து அற வாரியத்தின் (LWHPP) தலைவர் RSN ராயர் கூறினார்.


