• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Chinese New Year: 7 நாள் விடுமுறையுடன் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு… அப்படி என்ன சிறப்பு?

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Chinese New Year: 7 நாள் விடுமுறையுடன்  கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு… அப்படி என்ன சிறப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவில் முக்கியமாக கொடடப்படும் திருவிழா சீனப் புத்தாண்டு (Chinese New Year). இது சந்திர-சூரியன் அடிப்படையில் அமைந்த சீன நாள்காட்டி (காலண்டர்) துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

இது வசந்தப் பண்டிகை அல்லது “Chun Jie” என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது வசந்த காலத்தின் முதல் நாள் ஆகும். சீன புத்தாண்டு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

சீனப் புத்தாண்டு
இன்று சீனப் புத்தாண்டு… சீனர்கள் கொண்டாட்டம்… ஆனால் உலகப் பொருளாதாரம்?!

சீன வானியல் அறிஞர்கள் லுனி-சோலார் காலண்டரை (சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களை) மற்றும் Tian Gan Di Zhi எனப்படும் 24 சூரிய காலங்களைப் பயன்படுத்தி, புத்தாண்டு எந்த நாளில் இருக்கும் என்பதையும் கண்டு பிடித்தனர்.

மேலும், இந்த 24 காலங்கள் இயற்கையில் நிகழும் பருவ மாற்றங்களை காட்டுகிறது. உதாரணமாக எப்போது மழை வரும், எப்போது பனிப்பொழிவு இருக்கும் என்பதனை கணிக்க உதவுகின்றது.

இன்றைக்கும், நாஞ்சிங்கில் உள்ள Zijinshan Observatory இந்த கருவிகளை பயன்படுத்தி சீன புத்தாண்டு எந்த நாளில் வரும் என்பதை கணிக்கிடுகிறார்கள்.

1912 ஆண்டு, புதிதா உருவாக்கப்பட்ட சீன குடியரசு கிரிகோரியன் காலண்டரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கிட்டப்போது அதோட தலைவர்கள் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு “வசந்த விழா”ன்னு பேர் வைத்தார்களாம். இன்றும் சீனாவில் இதே பெயரில் தான் அழைக்கப்படுது.

லூநார் நியூ இயர் (சந்திர புத்தாண்டு) பேருக்கு பொருத்தமா, அதோட தேதி நிலவின் நிலமையை பொருத்து முடிவாகும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் அது மாறி மாறி வரும்.

சீனப் புத்தாண்டு

சந்திர காலண்டரில், ஒவ்வொரு ஆண்டும் சீன ஜாதகத்திலிருந்து ஒரு விலங்கோட பெயர் இடம் பெற்றிருக்கும். இது பண்டைய சீன கதைகளிருந்து வந்திருக்கு. இந்த 12 விலங்குகள்- எலி, மாடு, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகும். ஓராண்டு சுழற்சி முறையில் வேறு வேறு விலங்குகள் மீண்டும் மீண்டும் வரும் என்கிறார்கள்.

சந்திர புத்தாண்டு தென் கொரியா, திபெத், வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேசியா மாதிரி சீனர்கள் நிறைய இருக்கும் இடங்களில் கொண்டாடப் படுகிறது.

நாடு வேறானாலும், இந்தப் பண்டிகையின் முக்கியமான விஷயம் குடும்பமா சேர்ந்து சந்தோஷப்படுறத்துக்கும். நல்ல எதிர்காலத்துக்கு நம்பிக்கை வைப்பதும்தான்.

சீன மக்களின் வசந்த விழாவானது 40 நாள்கள் நடக்கின்றது மற்றும் பல துணை விழாக்கள் மற்றும் வழக்கங்களும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு தனியாக 7 நாள்கள் கொண்டாட்டம் இருக்கும். எனவே அந்த 7 நாள்களும் அரசாங்கம் விடுமுறை அளிக்கிறது.

புத்தாண்டின் மாலை நேரத்தில் சீன குடும்பங்கள் பாரம்பரியமாக ஒரு பெரிய கூட்டு உணவை சமைத்து சாப்பிடுவார்கள். இது ஆண்டின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு உணவு பெரும்பாலும் குடும்பத்தின் முதியவர் வீட்டில் நடத்தப்படுகிறது.

சீனப் புத்தாண்டு
Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!’ – காரணம் `டிக் டாக்?!’ – சுவாரஸ்ய பிண்ணனி

சந்திர புத்தாண்டு தனக்கென ஒரு தனி பயணக்காலத்தை உருவாக்கி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சீனாவில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு குடும்பத்தாருடன் வருவார்கள். அனைவரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். பயணிகள் கூட்ட நெரிசலால் இந்த விழாவானது (world largest human migration) உலகின் மிக பெரிய மனித இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது. ரயில்கள் மற்றும் விமான நிலையங்களிலும் கூட பெரிதும் நெரிசலை ஏற்படுத்துகிறது, இது அந்தப் பண்டிகையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்றே கூறலாம்.

Read More

Previous Post

குட் நியூஸ்.. குறைந்தது தங்கத்தின் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா ?

Next Post

சபா, சரவாக் மக்கள் வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருகின்றனர் – Malaysiakini

Next Post
சபா, சரவாக் மக்கள் வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருகின்றனர் – Malaysiakini

சபா, சரவாக் மக்கள் வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருகின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin