கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் திடீர் வாந்தி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சனிக்கிழமை (01) அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பிரிட்டிஷ் பெண் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 24 வயதுடைய இங்கிலாந்து பெண் என பொலிஸார் கூறுகின்றனர்.
பொது சுகாதார பரிசோதகர், சுகாதார அமைச்சு அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

