• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லஞ்ச வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை | Mahua Moitra case CBI conducts searches at multiple locations

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
லஞ்ச வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை | Mahua Moitra case CBI conducts searches at multiple locations
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக டிஎம்சி முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.

மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய கொல்கத்தாவில் உள்ள வேறு இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது. லோக்பால் ஆணைய உத்தரவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவாமொய்த்ரா. இவர் அதானி குழுமம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் மக்களவையில் 50 கேள்விகள் எழுப்பியுள்ளார். இத்தகைய கேள்விகளை எழுப்ப ரூ.2 கோடி வரை அவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்துபாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணையில் மஹுவா மொய்த்ரா கடந்த டிசம்பரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும்அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இதனிடையில், லஞ்சம் வாங்கியகுற்றச்சாட்டை மறுத்த மஹுவா மொய்த்ரா தனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

மேலும், மக்களவைத் தேர்தலில் தனது தொகுதியிலேயே மொய்த்ரா மீண்டும் போட்டியிட கட்சித் தலைவரும் மேற்கு வங்கமுதல்வருமான மம்தா வாய்ப்பளித்துள்ளார்.



Read More

Previous Post

குருத்தோலை ஞாயிறு இன்று… தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு

Next Post

சூப்பர் சுந்தர்…. 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
சூப்பர் சுந்தர்…. 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

சூப்பர் சுந்தர்.... 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin