• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர் சுப முகூர்த்தம் எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை…

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொடர் சுப முகூர்த்தம் எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.

இதையும் படிங்க: Thoothukudi Night Club: ஊர்ல எங்க பாத்தாலும் நைட் கிளப் தான்… சிறியவர் முதல் பெரியவர் வரை இதான் ஃபேவரைட்…

தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ. 2500க்கும், பிச்சி ரூ.2000க்கும், சம்பங்கி ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தை மாத தொடர் சுப முகூர்த்த தினங்களால் பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.2500க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.3500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.350க்கும், வாடாமல்லி கிலோ ரூ.200க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.500க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800க்கும், ரோஸ் கிலோ ரூ.350க்கும் விற்பனையாகிறது.

மேலும், ஸ்டெம் ரோஸ் ஒரு கட்டு ரூ.400க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.40க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.200க்கும், செவ்வந்தி கிலோ ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Thaipusam Festival: மருதமலை முருகன் கோவில் தைப்பூசம்… பக்தர்கள் வாகனங்களில் செல்லத் தடை…

இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறும்பொழுது, “தமிழகத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாகப் பூக்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தை மாதத்தில் வரிசையாகத் தொடர்ந்து முகூர்த்த தினங்கள் இருப்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப பூக்கள் வரத்துக் குறைவு. அதன் காரணமாக அனைத்து பூக்களுமே மூன்று மடங்கு விலை உயர்ந்து உள்ளது” எனத் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

February 01, 2025 1:25 PM IST

Read More

Previous Post

Dirt Bike Racing: அந்த பையனுக்கு பயம் இல்ல.. ஆஃப் ரோடு ரேஸில் புழுதி பறக்க கெத்து காட்டும் 8 வயது சிறுவன்..

Next Post

கூடுதல் வரி விதிப்பு எதிரொலி.. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர்.. புகாரளிக்க சீனா திட்டம்..!

Next Post
கூடுதல் வரி விதிப்பு எதிரொலி.. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர்.. புகாரளிக்க சீனா திட்டம்..!

கூடுதல் வரி விதிப்பு எதிரொலி.. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர்.. புகாரளிக்க சீனா திட்டம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin