இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம், இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி. இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்,

