Last Updated:
விராட் கோலி ரன் குவிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மைதானத்திற்கு வந்தனர். அவர்களுக்கு விராட் கோலி ஏமாற்றத்தை பரிசாககொடுத்தார்.
விராட் கோலியின் பங்களிப்பு துளியும் இல்லாமல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரயில்வேஸ் அணியை டெல்லி அணி வென்றுள்ளது.
சர்வதேச போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் விராட் கோலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததும், அதன் தொடர்ச்சியாக சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாததும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து.
இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்திருந்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த மூவரும் இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்டுக்கொண்டு வருவதற்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர். இதில் டெல்லி அணிக்காக விராட்கோலி விளையாடுகிறார்.
டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய ரயில்வேஸ் அணி 241 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் டெல்லி அணி விளையாடியபோது 374 ரன்கள் குவித்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து போல்ட் என்ற முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி 99 ரன்கள் சேர்த்திருந்தார். இதையடுத்து 133 ரன்கள் பின் தங்கிய நிலையில் ரயில்வேஸ் அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது.
அந்த அணி 114 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரயில்வேஸ் அணி.
இருப்பினும் இந்த வெற்றியில் விராட் கோலியின் பங்களிப்பு துளியும் கிடையாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் ரன் குவிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மைதானத்திற்கு வந்தனர். அவர்களுக்கு விராட் கோலி ஏமாற்றத்தை பரிசாககொடுத்தார்.
இதையும் படிங்க – ‘வணக்கம் ஆசானே’ காலை தொட்டு வணங்கிய விராட் கோலி.. இவர் யார் தெரிகிறதா?
இவை ஒருபக்கம் இருந்தாலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவர் தொடர்ந்து தடுமாறி வருவது இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
February 01, 2025 7:09 PM IST


