புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறிய வங்கதேசத்தினரை பிடிக்க தில்லி காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 21 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் கூறியதாவது, 21 வங்கதேசத்தினரில் 18 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.
இதையும் படிக்க: விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? – ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி

