**காங்கிரஸ் கட்சியின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். **
காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவில் மூன்று கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் 46 தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் போட்டியிடும் மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-
திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில்
கிருஷ்ணகிரி – கோபிநாத்
கடலூர் – விஷ்ணு பிரசாத்
கரூர் – ஜோதிமணி
விருதுநகர் – மாணிக்கம்தாகூர்
சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்
கன்னியாகுமரி – விஜய் வசந்த்
இதில் விஜய் வசந்த், ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சசிகாந்த் செந்தில், கோபிநாத் ஆகியோருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம்அசாம், அந்தமான் & நிகோபார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
