கோலாலம்பூர்:
நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 1) முதல் தொழிலாளர் ஒருவரின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் RM1,700 ஆக உயர்த்தப்பட்டு, அமலுக்கு வருகிறது.இதன் மூலம் மொத்தம் 4.37 மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்த நடைமுறை நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்றும், முதலாளிகள் மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவர்களின் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும் என்று, மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐந்துக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு, இந்த நடைமுறை இந்தாண்டு ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இது அவர்களின் சம்பள கட்டமைப்புகள் மற்றும் நிறுவன செயல்பாடுகளை அதற்கேற்ப மாற்றியமைக்க அவர்களுக்கு போதுமான அவகாசம் வழங்குவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இந்த முன்முயற்சியானது மடானி அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


