Last Updated:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
புனேவில் நடைபெற்ற 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா 53 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் உதவியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் 23 ரன்களும், பென் டக்கெட் 39 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ஜாஸ் பட்லர் 2 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஹேரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 26 பந்துகளி 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது.
19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தரப்பில் ஹர்ஷித் ரானா, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க – விராட் கோலிக்கு தொடரும் சோதனை.. ரஞ்சி கோப்பை தொடரில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மீதம் 1 போட்டி உள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
January 31, 2025 10:32 PM IST


