சிறப்பு எழுத்துருக்கள் இருக்கும் யுபிஐ ஐடிகளின் பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறிய இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அறிவிப்பு நாளைமுதல் அமலுக்கு வருகிறது.
இணையவழியான பணப்பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்திற்கு (UPI) இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை இயக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜனவரி 9 ஆம் தேதியில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துருக்கள் (Special Characters) இருப்பின், அந்த ஐடிகளின் பணப்பரிவர்த்தனை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து நிராகரிக்கப்படும் என்று கூறியிருந்தது. யுபிஐ ஐடிகளில் இருக்கும் #, @, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துருக்களை மாற்றினால், பணப்பரிவர்த்தனையில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் கூறியது.

