• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலிக்கு தொடரும் சோதனை.. ரஞ்சி கோப்பை தொடரில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
விராட் கோலிக்கு தொடரும் சோதனை.. ரஞ்சி கோப்பை தொடரில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 31, 2025 3:46 PM IST

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற உள்ள நிலையில் அதிலாவது விராட் கோலி ரன்கள் சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

News18News18
News18

ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சம்பவம் கோலி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்திய அணிக்கு பறிபோனது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே. எல். ராகுல் ஆகியோரது பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இவர்கள் மூவரும் ஓரளவு விளையாடி இருந்தால் குறைந்தபட்சம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை இந்திய அணி டிரா செய்திருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்டுக் கொண்டு வருவதற்காக இந்த 3 பேட்ஸ்மேன்களும் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடுகின்றனர்.

விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இந்தநிலையில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள ரயில்வே அணி 241 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதைத் தொடர்ந்து டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் அர்பிட் ரானா 10 ரன்களும், சனத் சங்வான் 30 ரன்களும் எடுத்தனர். யஷ் துல் 32 ரன்கள் சேர்த்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார்.

What A knock by virat kohli another failure

Virat kohli

Kingkohli pic.twitter.com/pD2UQ2E3Sz


— Narendra Kumar (@Narendr35) January 31, 2025

உள்ளூர் போட்டிகளில் கூட சுமாரான அளவுக்கு விராட் கோலி ரன் எடுக்க முடியாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டமிழந்த பின்னர் தலையை கொஞ்சம் கூட அவர் தூக்காமல் குனிந்தவாறே அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற காட்சிகள் ரசிகர்கள் மனதை சுக்கு நூறாக உடைத்தன.

இதையும் படிங்க – “தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு” – டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் பேட்டி!

இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் படோனி 99 எடுத்துள்ளார். தற்போது முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 50 ரன்கள் அதிகமாக முன்னிலை பெற்றுள்ளது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற உள்ள நிலையில் அதிலாவது விராட் கோலி ரன்கள் சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

First Published :

January 31, 2025 3:46 PM IST



Read More

Previous Post

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு | Parliament adjourned for the day

Next Post

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி… பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Next Post
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி… பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி... பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin